ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்! 

Updated: Tue, Apr 26 2022 09:25 IST
Royal Challengers Bangalore vs Rajasthan Royals, 39th Match IPL 2022 – Cricket Match Prediction, Fan (Image Source: Google)

ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 39ஆவது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. 

இந்த போட்டி, புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. 

போட்டி முன்னோட்டம்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது. அதேபோல ராஜஸ்தான் அணி, 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது. 

இந்த போட்டியில் வெற்றிபெற்றால் பெங்களூர் அணி, மீண்டும் 2ஆம் இடத்திற்கு வாய்ப்புள்ளதால்இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 25
  • ராஜஸ்தான் வெற்றி - 10
  • பெங்களூரு வெற்றி - 13
  • முடிவில்லை - 2

உத்தேச லெவன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:  அனுஜ் ராவத், ஃபாப் டு பிளெஸிஸ் (கே), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கே), ஷிம்ரன் ஹெட்மயர், ரியான் பராக், கருண் நாயர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ஓபேட் மெக்காய், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • கீப்பர் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக்
  • பேட்ஸ்மேன்கள் - ஃபாஃப் டு பிளெசிஸ், தேவ்தத் படிக்கல், விராட் கோலி
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், ரவிச்சந்திரன் அஸ்வின்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை