ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Apr 23 2022 13:26 IST
Image Source: Google

ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 36-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. 

இந்த போட்டி, மும்பையில் உள்ள ப்ரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 20 போட்டிகளில் நேருக்கு நேராக மோதியுள்ளது. அதில் பெங்களூர் அணி 8 போட்டிகளும், ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் - ப்ரபோர்ன் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளது.

அதிலும் பேட்டிங்கில் ஃபாஃப்,தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் ஆகியோர் அசுர ஃபார்மில் உள்ளனர். அதேவேளை முன்னாள் கேப்டன் விராட் கோலி அடுத்தடுத்த போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது. அதனால் அவர் ஃபார்முக்கு வருவது பெரும் பேசுபோருளாக மாறி வருகிறது.

மேலும் பந்துவீச்சில் ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹசில்வுட், ஹசரங்கா இருப்பது அணி பலத்தை கூட்டுகிறது. 

அதேபோல கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது. 

அந்த அணியில் ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், அபிஷேக் சர்மா பேட்டிங்கிலும், நடராஜன், புவனேஷ்வர் குமார் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டுவருகின்றன. 

இப்போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 20
  • ஆர்சிபி வெற்றி - 8
  • எஸ் ஆர் எச் வெற்றி - 12

உத்தேச அணி 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கே), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், ஜே சுசித், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி நடராஜன்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), அனுஜ் ராவத், விராட் கோலி, ஷாபாஸ் அகமது, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - தினேஷ் கார்த்திக், நிக்கோலஸ் பூரன்
  • பேட்ஸ்மேன்கள் - ராகுல் திரிபாதி , ஃபாஃப் டு பிளெசிஸ், கேன் வில்லியம்சன்
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், ஐடன் மார்க்ரம்
  • பந்துவீச்சாளர்கள் - டி நடராஜன், ஜோஷ் ஹேசல்வுட், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை