ஐபிஎல் 2021: சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச பிளேயிங் லெவன்!

Updated: Sat, Oct 02 2021 14:53 IST
RR vs CSK, 47th Match IPL Match Probable Playing XI (Image Source: Google)

ஐபிஎல் 14வது சீசனில் முதல் அணியாக சிஎஸ்கே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டது. டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். ஆனால் கேகேஆர், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 4 அணிகளுக்கும் இடையே, 4ஆவது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேற கடும் போட்டி நிலவுகிறது.

அந்தவகையில், 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7ஆம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது. பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி, அபுதாபியில் இன்று நடக்கும் போட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது.

இப்போட்டிக்கான சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச பிளேயிங் லெவன்

ராஜஸ்தான் ராயல்ஸ்: எவின் லூயிஸ், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன்/ கிளென் பிலீப்ஸ், மஹிபால் லோம்ரார், ரியான் பராக், ராகுல் திவேத்தியா, கிறிஸ் மோரிஸ், கார்த்திக் தியாகி, சேத்தன் சக்காரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன்), ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஹேசில்வுட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை