ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- அணிகள் ஓர் அலசல்!

Updated: Sat, Apr 19 2025 15:28 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 2 வெற்றி 5 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்த வரையில் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர், நிதீஷ் ரானா உள்ளிட்டோர் இருப்பது பலமாக பார்க்கப்படுகிறது. 

பந்துவீச்சை பொறுத்தமட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் வநிந்து ஹசரங்கா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுடன் மஹீஷ் தீக்ஷ்னா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்பட வேண்டிய நிலையில் உள்ளனர். அதேசமயம் இன்றைய போட்டிக்கான பந்துவீச்சு துறையில் சில மாற்றங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், வனிந்து ஹசரங்க, ஷிம்ரோன் ஹெட்மியர், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வியைச் சந்தித்த கையோடு, இப்போட்டியை எதிர்கொள்கிறது. மேலும் தோல்விக்கு பிறகு அந்த அணி இப்போட்டியை எதிர்கொள்வதால் இதில் வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான ஃபர்மில் உள்ளனர்.

அவர்களுடன் ரிஷப் பந்த், டேவிட் மில்லர், ஆயூஷ் பதோனி ஆகியோரும் சோபிக்கும் பட்சத்தில் அது அணிக்கு கைகொடுக்கும். மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டுள்ள மயங்க் யாதவ் அணிக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் அணியின் பந்துவீச்சு துறையும் வலிமைப்பெற்றுள்ளது. மேற்கொண்டு ஷர்துல் தாகூர், அவேஷ் கான், ரவி பிஷ்னாய் உள்ளிட்டோருடன் திக்வேஷ் ரதியும் அசத்தி வருவதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்கானது என எதிர்பார்க்கப்படுகிறது. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், அவேஷ் கான், திக்வேஷ் சிங்.

நேருக்கு நேர்

  • மொத்தம் - 05
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – 04
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 01

Also Read: Funding To Save Test Cricket

RR vs LSG Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன்(கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த், துருவ் ஜூரல்
  • பேட்ஸ்மேன்கள் - மிட்செல் மார்ஷ் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ரம், வனிந்து ஹசரங்க, ரியான் பராக்
  • பந்துவீச்சாளர்கள்- ஜோஃப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய்.
     
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை