ஐபிஎல் திருவிழா 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்!

Updated: Mon, Apr 12 2021 12:10 IST
RR vs PBKS, 4th Match IPL 2021 Match Preview (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 

மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகளிலும் அதிரடியான பேட்ஸ்மேன்கள், தலைசிறந்த டி20 பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

பஞ்சாப் கிங்ஸ்

கடந்தாண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயருடன் விளையாடி பஞ்சாப் அணி, இம்முறை பஞ்சாப் கிங்ஸ் என்ற புதுபெயருடன் சீசனைத் தொடங்கவுள்ளது. கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி, கடந்த முறை நூழிலையில் பிளே ஆஃப் சுற்றை தவறவிட்டிருந்தது. 

இதன் காரணமாக இம்முறை தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றை முனைப்பில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. 

ராகுல், அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரான், டேவிட் மாலன், ஹென்ட்ரிக்ஸ் போன்ற அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை கொண்டுள்ள பஞ்சாப் அணிக்கு, மிடில் ஆர்டரில் தமிழக வீரர் ஷாருக் கான், தீபக் ஹூடா, மந்தீப் சிங், சர்ஃப்ராஸ் கான், பிரப்சிம்சரன் சிங், ஜலஜ் சக்சேனா ஆகியோர் உதவுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் காயத்திலிருந்து மீண்டுள்ள முகமது ஷமி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் ஜெய் ரிட்சர்ட்சன், ரிலே மெரிடித், அர்ஷ்தீப் சிங், முருகன் அஸ்வின் ஆகியோர் அணியில் இடம்பெற்றிருப்பது பஞ்சாப் அணிக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ராஜஸ்தான் ராயல்ஸ்

கடந்த சீசனில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, யாரும் எதிர்பார்க்காத வகையில் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை நீக்கிவிட்டு, அப்பதவியை இந்திய வீரர் சஞ்சு சாம்சனுக்கு வழங்கியுள்ளது. 

ஓவ்வொரு சீசனிலும் அதிரடி வீரர்களுக்கு பெயர்போனா ராஜஸ்தான் அணி, கடந்த சில சீசன்களாக சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்திவருகிறது. இதன் காரணமாகவே தென் ஆப்பிரிக்க ஆல்ரவுன் கிறிஸ் மோரிசை அந்த அணி 16.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

பட்லர், ஸ்டோக்ஸ், டேவிட் மில்லர், போன்ற அதிரடி வீரர்களையும், ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால், மனன் வோரா, கேசி கரியப்பா, ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் திவேத்தியா, ஷிவம் தூபே போன்ற நடுவரிசை வீரர்கள் இருப்பது அணிக்கான பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் காயம் காரணமாக நட்சத்திர வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என்பதால் அணியின், நம்பிக்கை மோரிஸ், உனாத் கட், கார்திக் தியாகி, முஸ்தபிஸூர் ஆகியோரையேச் சார்ந்துள்ளது. தனக்கிருக்கும் சவால்களைச் சமாளித்து சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு செல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

நேருக்கு நேர்

ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிகபட்சமாக 12 முறையும், பஞ்சாப் கிங்ஸ் அணி 9 முறையும் வெற்றியை ஈட்டியுள்ளன. 

இருப்பினும் இன்றைய போட்டியைப் பொறுத்தவரை பஞ்சாப் கிங்ஸ் அணியே பலம் வாய்ந்தாக இருக்கிறது என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் இன்றைய போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. 

உத்தேச அணி

பஞ்சாப் கிங்ஸ்: கே.எல். ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங், நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், தீபக் ஹூடா, ஜெய் ரிட்சர்ட்சன், ரிலே மெரிடித், முகமது ஷமி, ரவி பிஸ்னோய்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ரியான் பராக், ஷிவம் தூபே, ராகுல் திவேத்தியா, கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் உனட்கட், கார்திக் தியாகி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை