டிஎன்சிஏ தலைவர் பதவியை ராஜிநாமா செய்த ரூபா குருநாத்!

Updated: Fri, Dec 31 2021 13:31 IST
Rupa Gurunath steps down as TNCA president (Image Source: Google)

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) புதிய தலைவராக என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் 2019 செப்டம்பரில் பொறுப்பேற்றுக்கொண்டார். போட்டியின்றித் தேர்வான ரூபா குருநாத், பிசிசிஐ மாநில கிரிக்கெட் சங்கங்களின் முதல் பெண் தலைவர் என்கிற பெருமையைப் பெற்றார். 

இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக நேற்று அறிவித்தார். வியாபாரம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்ததாக ரூபா குருநாத் கூறியுள்ளார். என். சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக அவர் பணியாற்றி வருகிறார். இதனால் ரூபா மீது இரட்டை ஆதாயக் குற்றச்சாட்டு எழுந்தது. 

ரூபா குருநாத் தலைவராக இருந்த காலகட்டத்தில் தமிழ்நாடு அணி அடுத்தடுத்த வருடங்களில் சையத் முஷ்டாக் அலி கோப்பைகளை வென்றுள்ளது. இந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிரான இரு டெஸ்டுகளும் ஐபிஎல் 2021 போட்டியின் சில ஆட்டங்களும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை