Tamil nadu cricket association
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு கோல்ட்ஸ் அணி!
தமிழ்நாடு கிரிக்கெட் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள உள்ளூர் அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி மே 06ஆம் தேதி தொடங்கும் இச்சுற்றுப்பயணத்தில், நான்கு போட்டிகளைக் கொண்ட இரண்டு நாள் கிரிக்கெட் தொடரிலும், அதனைத்தொடர்ந்து 7 ஓருநாள் போட்டிகளிலும் தமிழ்நாடு அணி விளையாடவுள்ளது.
அதன்படி இத்தொடருக்கான தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக லக்ஷ்மிபதி பாலாஜியும், அணியின் ஆலோசகராக ராபின் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இந்த சுற்றுப்பயணத்திற்கான தமிழ்நாடு அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த அணியில் பிரதோஷ் ரஞ்சன் பால், நாராயண் ஜெகதீசன், சோனு யாதவ், லோகேஷ்வர், விமர் குமார் போன்ற வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
Related Cricket News on Tamil nadu cricket association
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: தமிழ்நாடு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்; ரசிகர்கள் விமர்சனம்!
இந்தாண்டிற்கான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணியின் கேப்டனாக அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. ...
-
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல்: அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
டிஎன்சிஏ தலைவர் பதவியை ராஜிநாமா செய்த ரூபா குருநாத்!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை ரூபா குருநாத் ராஜிநாமா செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47