SA20 League: வில் ஜேக்ஸ் காட்டடி; இமாலய இலக்கை நிர்ணயித்தது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!

Updated: Sat, Jan 14 2023 18:48 IST
SA T20 League: Will Jacks brilliant knock helps PC post a total of 216 on their 20 overs! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 லீக் தொடர் ரசிகர்களின் கவணத்தை ஈர்த்து வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 6ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கேப்பிட்டல்ஸ் அணியில் நட்சத்திர வீரர் பிலிப் சால்ட் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரைலி ரூஸொவும் அதிரடியாக விளையாடி 20 ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் வில் ஜேக்ஸ் மற்றும் தியூனிஸ் டி புரூயின் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சை சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசித்தள்ளினர். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் வில் ஜேக்ஸ் தனது அரைசதத்தையும் கடந்து அசத்தினார். 

பின்னர் அவருடன் இணைந்து விளையாடிய டி புரூயினும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 23 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 42 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மறுமுனையில் சதத்தை நெருங்கிய வில் ஜேக்ஸும் 46 பந்துகளில் 8 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என 92 ரன்களில் ஆட்டமிழந்து 8 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தறவிட்டார்.

இதையடுத்து வந்த ஜிம்மி நீஷம் தனது பங்கிற்கு 18 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் வெய்ன் பார்னெல் முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இஅப்பிற்கு 216 ரன்களைச் சேர்த்துள்ளது.

அதேசமயம் சன்ரைசர்ஸ் அணி தரப்பில் சிசாண்டா மாகலா,ஒட்னியல் பார்ட்மேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை