Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Sec vs pc

எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை 125 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
Image Source: Google

எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை 125 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!

By Bharathi Kannan January 25, 2024 • 22:40 PM View: 136

எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பலப்பரீட்சை நடத்தியது. செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் அதிரடி தொடக்க வீரர் வில் ஜேக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய கைல் வெர்ரைன் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பிலிப் சால் 20 ரன்களிலும், ரைலீ ரூஸோவ் 13 ரன்களுக்கும், காலின் இங்ராம் 4 ரன்களுக்கும என ஆட்டமிழந்தனர். 

Related Cricket News on Sec vs pc