பாக்ஸிங் டே டெஸ்ட்: அஸ்திவாரத்தை சாய்த இங்கிடி; ராகுல் பொறுப்பான ஆட்டம்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்டாக செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் - கேஎல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைந்தது.
மேலும் இருவரும் அரைசதமும் கடந்தனர். அதன்பின் 60 ரன்களைச் சேர்த்திருந்த மயங்க் அகர்வால் இங்கிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய புஜாரா சந்தித்த முதல் பந்திலேயே பீட்டர்சன்னிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அதன்பின் ராகுலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து விக்கெட் இழப்பை தடுத்தார்.
இதனால் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. கேஎல் ராகுல் 68 ரன்களுடனும், விராட் கோலி 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.