பாக்ஸிங் டே டெஸ்ட்: தெ.ஆப்பிரிக்காவை 197-ல் சுருட்டிய இந்தியா; இரண்டாவது இன்னிங்ஸில் சறுக்கல்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றவாது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் கேஎல் ராகுல் 123 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் டெம்பா பவுமாவை தவிற மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதனால் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவதற்கு முன்னதாகவே தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 197 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக டெம்பா பவுமா 52 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து 130 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் - மயங்க் அகர்வால் தொடக்கம் தந்தனர். இதில் மயங்க் அகர்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் 5 ரன்களுடனும், ஷர்துல் தாக்கூர் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையடுத்து 142 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நாளை இரண்டாவது இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.