தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் 123 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, எய்டன் மாா்க்ரமை 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு இழந்தது. சிராஜ் வீசிய 4-ஆவது ஓவரில் அவா் ராகுலிடம் கேட்ச் கொடுத்தாா். அடுத்து வந்த டோனி டி ஸோர்ஸி நிதானமாக விளையாடினார். டீன் எல்கா் - ஸோர்ஸி பாா்ட்னா்ஷிப் 2ஆவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சோ்த்தனர். 

Advertisement

அதன்பின் 28 ரன்கள் எடுத்த ஸோர்ஸி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கீகன் பீட்டா்சனை 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பச் செய்தாா் பும்ரா. அதேசமயம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டீன் எல்கர் தனது சதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய அறிமுக வீரர் டேவிட் பெடிங்ஹாம் 7 பவுண்டரி, 2 சிச்கர்கள் என 56 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 256 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை டீன் எல்கா் 140 ரன்களுடனும், மாா்கோ ஜான்சென் 3 ரன்களுடன் தொடங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய ஜான்சென் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் இரட்டை சதத்தை நெருங்கிய டீன் எல்கர் 185 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

பின்னர் களமிறங்கிய ஜெரால்ட் கோட்ஸி அதிரடியாக விளையாடி இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 19 ரன்களைச் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால் மூன்றாம் நாள் உணவு இடையேவளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்களைச் சேர்த்தது. இதில் ஜான்சென் 72 ரன்களுடனும், ரபாடா ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News