SA vs IND, 3rd Test: 223 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்; தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்!

Updated: Tue, Jan 11 2022 22:24 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் ஆட்டம் கேப்டவுனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

அதன்படி விளையாடிய இந்திய அணி விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தினால் 77.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தியா 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 79 ரன்களிலும், புஜாரா 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 
தென் ஆப்பிரிக்க தரப்பில் ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டீன் எல்கர், ஐடன் மார்க்ரம் ஆகியோர் களமிறங்கினர். 

ஜாஸ்பிரித் பும்ரா முதல் ஓவரை வீசினார். அவர் பந்துவீச்சை எதிர்கொள்ள இருவரும் திணறினர். இதன் நீட்சியாக எல்கர் 3 ரன்களுக்கு பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, நைட் வாட்ச்மேனாக கேசவ் மகாராஜ் களமிறக்கப்பட்டார். காயத்தையும் பொருட்படுத்தாது அவர் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டை பாதுகாத்து விளையாடினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 206 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இதில் மார்க்ரம் 8 ரன்களுடனும், மகாராஜ் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். பும்ரா 4 மெய்டன் ஓவர்களை வீசி 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை