SA vs IND, 3rd Test: அரைசதத்தை நோக்கி கோலி; புஜாரா ஏமாற்றம்!

Updated: Tue, Jan 11 2022 19:26 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

ஹனுமா விஹாரிக்குப் பதிலாக விராட் கோலியும் சிராஜுக்குப் பதிலாக உமேஷ் யாதவும் இந்திய அணியில் இடம்பிடித்தார்கள். தெ.ஆ. அணியில் மாற்றம் எதுவுமில்லை. 

பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இதனால் 12 ரன்களில் ஆலிவியரிடம் கே.எல். ராகுலும் 15 ரன்களில் ரபாடாவிடம் மயங்க் அகர்வாலும் வீழ்ந்தார்கள். இதன்பிறகு புஜாராவும் கோலியும் பொறுப்புடன் விளையாடினார்கள். புஜாரா 4 பவுண்டரிகள் அடித்து சுறுசுறுப்பாக இயங்கினார்.

தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சு துல்லியமாக இருந்தாலும் கோலியும் புஜாராவும் கவனமாக விளையாடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்கள். 3ஆவது விக்கெட்டுக்கு இருவரும் 132 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்கள். 77 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த புஜாரா, ஜான்சன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 
நன்கு விளையாடிய புஜாரா அரை சதமாவது எடுப்பார் என ரசிகர்கள் எண்ணிய நிலையில் அவர் ஏமாற்றம் அளித்துள்ளார். அதன்பின் களமிறங்கிய அஜிங்கியா ரஹானே 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடாவிடம் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி - ரிஷப் பந்த் இணை பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறுக சிறுக ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.

இதனால் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளது. விராட் கோலி 40 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

தென் ஆப்பிரிக்க தரப்பில் காகிசோ ரபாடா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 

இந்திய அணி 39 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 19, ரஹானே 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை