தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!

Updated: Sun, Nov 10 2024 10:49 IST
Image Source: Cricketnmore

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று (நவம்பர் 10) க்கெபெர்ஹாவில் நடைபெறவுள்ளது.

இத்தொடரில் ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியிலேயே அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளதால், இப்போட்டியில் தங்கள் ஆதிக்கத்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் ஆப்பிரிக்க அணி இந்த போட்டியில் விளையாடும் என்பதால், இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் தற்சமயம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதில் இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் சஞ்சு சாம்சன் அடுத்தடுத்த் போட்டிகளில் சதம் விளாசி உட்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். அவருடன் சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா, திலக் வர்மா ஆகியோரும் வலு சேர்க்கின்றனர். 

மேற்கொண்டு ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் உள்ளிட்டோரும் பேட்டிங்கில் அணியின் நீளத்தை கூட்டுகின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு வரும் நிலையில் அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இதனால் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் பெரிதளவில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா உத்தேச லெவன் : சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.

தென் ஆப்பிரிக்க அணி

மறுபக்கம் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி சமீப காலமாகவே சர்வதேச கிரிக்கெட்டில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் அந்த அணி பேட்டர்கள் சரியாக செயல்படாததே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதில் ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்டோர் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறினர். 

இதனால் பேட்டர்கள் வரிசையில் ஒருசில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சை பொறுத்தவரையில் மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி, கேஷவ் மகாராஜ் சிறப்பாக செயல்பட்ட சமயத்திலும் மற்ற வீரர்கள் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினர். இதனல் இன்றைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஓட்னியல் பார்ட்மேன் சேர்க்கப்படுவதற்கு அதிகளவிலான வாய்ப்பு உள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: ரியான் ரிக்கல்டன், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ரீஸா ஹென்றிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், கேசவ் மகாராஜ், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, ஒட்னீல் பார்ட்மேன், பேட்ரிக் க்ரூகர்.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை