SA vs IND, 1st ODI: தொடர் பணிச்சுமை; ரபாடாவுக்கு ஓய்வு!

Updated: Tue, Jan 18 2022 21:38 IST
SA vs IND UPDATE: Kagiso Rabada Released From South Africa Squad For ODI Series Against India (Image Source: Google)

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையேயான  3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என தென் ஆப்பிரிக்கா வென்றது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன.

அத்னன்படி முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 19) பார்ல் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் பணிச்சுமை காரணமாக தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியிலிருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக தோடர்ந்து சர்வதேச போட்டிகளில் ரபாடா விளையாடி வருவதை கருத்திக்கொண்டு அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

அதேசமயம் ரபாடாவுக்கு மாற்று வீரராக யாரையும் அணியில் சேர்க்கவில்லை என்பதையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெளிவுப்படுத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை