SA vs IND: அஸ்வினுக்கு துணைக் கேப்டன் பதவி கிடைக்குமா?

Updated: Tue, Dec 14 2021 14:43 IST
Image Source: Google

இந்திய அணி இம்மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் ரோஹித் சர்மா காயத்தால் விலகியதால், புதிய துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து பங்கேற்று வரும் ஒரே சுழற்பந்து வீரர் அஸ்வின் தான். 

மேலும் இந்திய அணியில் அதிக அனுபவம் வாய்ந்த வீரராகவும் அஸ்வின் திகழ்கிறார். சீனியர் வீரர் என்ற அடிப்படையில் அஸ்வினுக்கு துணைக் கேப்டன் வாய்ப்பு வழங்கப்படலாம்.

அதே நேரத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தால் கேஎல் ராகுல் அல்லது ரி‌ஷப் பந்த் ஆகியோரில் ஒருவர் இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்படுவார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை