தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், இரண்டாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, Jan 02 2025 22:16 IST
Image Source: Cricketnmore

South Africa vs Pakistan 2nd test Dream11 Prediction: தென் ஆப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமாய்ம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடாரில் முன்னிலைப் பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. 

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜனவரி 03) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்வுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். மறுபக்கம் பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய முயற்சிக்கும். இதன் காரணமாகவே இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புக்ள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

SA vs PAK 2nd test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான்
  • இடம்: நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப்டவுன்
  • நேரம்: ஜனவரி 03, மதியம் 2 மணி (இந்திய நேரப்படி)

SA vs PAK 2nd test Live Streaming Details

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

SA vs PAK: Head-to-Head In Test

  • Total Matches: 29
  • South Africa: 16
  • Pakistan: 06
  • No Result: 07

SA vs PAK: Pitch Report

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தன் அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 61 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 23 முறை முதலில் பேட்டிங் செய்ய அணிகளும், 26 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 321 ரன்களாகவும், கடைசி இன்னிங்ஸ் சராசரி 161 ரன்களாகவும் உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 651 ரன்களாக உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

South Africa vs Pakistan Predicted XIs

பாகிஸ்தான் உத்தேச லெவன்: ஷான் மசூத் (கேப்டன்), சைம் அயூப், கம்ரான் குலாம், பாபர் ஆசாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், நசீம் ஷா, குர்ரம் ஷாஜாத், நௌமன் அலி, மிர் ஹம்சா

தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா(கேப்டன்), டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரேய்ன்(w), மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, குவேனா மபாகா.

SA vs PAK Dream11 Team

  • Wicket-keepers: கைல் வெர்ரைன் , முகமது ரிஸ்வான்
  • Batters: டெம்பா பவுமா(கேப்டன்), ஐடன் மார்க்ரம், பாபர் ஆசாம், சௌத் ஷகீல்
  • All-rounder: மார்கோ ஜான்சென் (கேப்டன்), வியான் முல்டர், சைம் அயூப்
  • Bowlers: காகிசோ ரபாடா, முகமது அப்பாஸ், குவேனா மபாகா

SA vs PAK 2nd Test Dream11 Prediction, SA vs PAK Dream11 Prediction, Today Match SA vs PAK, SA vs PAK Test Series, SA vs PAK Dream11 Team, Fantasy Cricket Tips, SA vs PAK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between South Africa vs Pakistan

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை