South Africa vs Sri Lanka 1st Test Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க அணி இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (நவம்பர் 27) டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடர்களுக்கான இரு அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. 

Advertisement

சமீப காலங்களில் சிறப்பான கிரிக்கெட்டின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் அந்த அண்யின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதேசமயம் மறுபக்கம் தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நிலையில் இத்தொடரை எதிர்கொள்கிறது. மேலும் டெம்பா பவுமா, மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி என நட்டத்திர வீரர்களும் அணிக்கு திரும்பியுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

SA vs SL 1st Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இலங்கை
  • நேரம் - மதியம் 01:00 மணி (இந்திய நேரப்படி)
  • இடம் - கிங்ஸ்மீத் மைதானம், டர்பன்

SA vs SL 1st Test Pitch Report

தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிங்ஸ் மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 46 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 19 முறை முதலில் பேட்டிங் செய்ய அணிகளும், 13 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 298 ரன்களாகவும், கடைசி இன்னிங்ஸ் சராசரி 197 ரன்களாகவும் உள்ளன. மேலும் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 658 ரன்களாக உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

SA vs SL 1st Test: Where to Watch?

Advertisement

தென் ஆப்பிரிக்கா - வங்கதேச டி20 தொடரை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

SA vs SL Test Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 31
  • தென் ஆப்பிரிக்கா- 16
  • இலங்கை - 09
  • முடிவில்லை - 06

South Africa vs Sri Lanka 1st Test Probable Playing XI

Advertisement

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: ஐடன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா (கே), டேவிட் பெட்டிங்ஹாம், கைல் வெர்ரைன், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹராஜ், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா.

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, திமுத் கருணாரத்னே, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய் டி சில்வா (கேப்டன்), குசல் மெண்டிஸ், லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய, மிலன் ரத்நாயக்க, அசித்த ஃபெர்னாண்டோ.

SA vs SL 1st Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - தினேஷ் சண்டிமால்
  • பேட்ஸ்மேன்கள் - ஏஞ்சலோ மேத்யூஸ், பதும் நிஷங்க, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா
  • ஆல்-ரவுண்டர்கள் - வியான் முல்டர், கமிந்து மெண்டிஸ், மார்கோ ஜான்சன் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா (துணை கேப்டன்), அசித்த ஃபெர்னாண்டோ, ஜெரால்ட் கோட்ஸி.
Advertisement

SA vs SL 1st Test Dream11 Prediction, SA vs SL Dream11 Prediction, Today Match SA vs SL, SA vs SL Test Series, SA vs SL Dream11 Team, Fantasy Cricket Tips, SA vs SL Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between South Africa vs Sri Lanka

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News