தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸை வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து அந்த அணிக்கு தொடக்கம் கொடுக்க ஜோர்டன் ஹார்மேன் - டேவிட் மாலன் இணை களத்திற்கு வந்தது. இதில் டேவிட் மாலன் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரீஸ் டாப்லி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து ஹார்மேனுடன் இணைந்த டாம் அபேல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். 

Advertisement

இப்போட்டியில் இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோர் உயர்ந்ததுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 90 ரன்களை எட்டியது. அதன்பின் அரைசதத்தை நெருங்கி ஜோர்டன் ஹார்மேன் 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் அரைசதம் கடந்திருந்த டாம் அபேலும் 55 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகாராஜின் அதே ஓவரில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இவர்களை பிரிக்கமுடியாமல் எதிரணி பந்துவீச்சாளர்களும் தடுமாற, அதிரடியாக விளையாடி வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 56 ரன்களையும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 42 ரன்களையும் சேர்த்ததுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அடித்து அசத்தினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 204 ரன்களைக் குவித்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News