எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. 

Advertisement

இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்கள் வில் ஜேக்ஸ் ஒரு ரன்னுடன் நடையைக் கட்ட, அவரைத் தொடர்ந்து 12 ரன்களை எடுத்திருந்த பிலிப் சால்ட்டும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கைல் வெர்ரைன் ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ரைலீ ரூஸோவ், காலின் இங்க்ரம், ஜேம்ஸ் நீஷம், கார்பின் போஷ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த கைல் வெர்ரைன் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 72 ரன்களைச் சேர்க்க,  20 ஓவர்கள் முடிவில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 167 ரன்களைச் சேர்த்தது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் தரப்பில் லிசாத் வில்லியம்ஸ், ரோமாரியோ செப்ஃபர்ட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் தரப்பில் தொடக்க வீரர்கள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 9 ரன்களுக்கும், ரீஸா ஹென்றிக்ஸ் 4 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

அதன்பின் இணைந்த லூயிஸ் டு ப்ளூய் - மகன்யா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தின. பின் 33 ரன்களுக்கு டு ப்ளூயும், 40 ரன்களில் மகன்யாவும் ஆட்டமிழக்க சூப்பர் கிங்ஸ் அணி சற்று தடுமாறியது. ஆனல் அதன்பின் இணைந்த மொயீன் அலி - டொனவன் ஃபெரீரா இணை எதிரணி பந்துவீச்சை சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெரீரா 18 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன் 20 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 56 ரன்களையும், மொயீன் அலி 25 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றிபெற வைத்தனர். இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி நடப்பு சீசனின் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News