எஸ்ஏ20 2024: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய் அடி காக்; பார்ல் ராயல்ஸுக்கு 191 ரன்கள் இலக்கு!

Updated: Fri, Jan 26 2024 22:49 IST
எஸ்ஏ20 2024: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய் அடி காக்; பார்ல் ராயல்ஸுக்கு 191 ரன்கள் இலக்கு! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் இரண்டாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்லில் உள்ள போல்ண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக டோனி டி ஸோர்ஸி - மேத்யூ பிரீட்ஸ்கி இணை களமிறங்கினர். இதில் டோனி டி ஸோர்ஸி 10 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மேத்யூ பிரீட்ஸ்கி 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேஜே ஸ்மட்ஸ் - குயின்டன் டி காக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 52 ரன்கள் எடுத்த நிலையில் ஜேஜே ஸ்மட்ஸ் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஹென்றிச் கிளாசெனும் அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்சர்களும் விளாச அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குயின்டன் டி காக் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 83 ரன்களையும், ஹென்றிச் கிளாசென் 9 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 30 ரன்களையும் விளாசினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களைச் சேர்த்துள்ளது. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் லுங்கி இங்கிடி, ஒபேத் மெக்காய், ஜார்ன் ஃபோர்டுயின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை