எஸ்ஏ20 2024: சிக்சர் மழை பொழிந்த ரியான், ரஸ்ஸி; ஜேஎஸ்கேவிற்கு 244 டார்கெட்!

Updated: Sat, Jan 13 2024 19:38 IST
எஸ்ஏ20 2024: சிக்சர் மழை பொழிந்த ரியான், ரஸ்ஸி; ஜேஎஸ்கேவிற்கு 244 டார்கெட்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவின் ஃபிரான்சைஸ் டி20 லீக் தொடரான எஸ்ஏ20 தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், கீரென் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெற்றறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்த்து மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ரஸ்ஸி வெண்டர் டுசென் - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியின் முதலிரண்டு ஓவர்களில் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை சோர்வடைய செய்தனர். 

ஆனால் அதன்பின் அதிரடியையைக் காட்டத்தொடங்கிய இருவரும் போட்டிப்போட்டு சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசித் தள்ளினர். இதில் ரஸ்ஸி வெண்டர் டுசென் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் இருந்த ரியான் ரிக்கெல்டனும் 27 பந்துகளில் அரைசதத்தைக் கடந்து அசத்தினார். தொடர்ந்து இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த ஜோபர்க் அணி பந்துவீச்சாளர் செய்வதறியாமல் திகைத்துப் போயினர். 

இதில் பவுண்டரி மழை பொழிந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் 46 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 9 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 104 ரன்களை விளாசிய ரஸ்ஸி வேண்டர் டுசெனது விக்கெட்டை இம்ராம் தாஹிர் கைப்பற்றி இமாலய பார்ட்னர்ஷிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

இதனையடுத்து களமிறங்கிய இளம் வீரர் டெவால் பிரீவிஸும் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸியின் அபாரமான கேட்சின் மூலம் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டோன் 12 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரியான் ரிக்கெல்டன் சதத்தை நெருங்கிய நிலையில் 49 பந்துகளில் 6 பவுண்டரி, 8 சிச்கர்கள் என 98 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களைச் சேர்த்தது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர், லிசாத் வில்லியம்ஸ், ரோமாரியோ செப்ஃபெர்ட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை