SA20 League Final: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை 135 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரின் முதலாவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.
இந்த இறுதிப்போட்டி நேற்று நடந்திருக்க வேண்டியது. ஆனால் ஜோஹன்னஸ்பர்க்கில் மழை காரணமாக மைதானம் குளம் போல் இருந்ததால் நேற்று போட்டியை நடத்த முடியாததால் இன்று இறுதிப்போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியி டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. தொடக்க வீரர்கள் பிலீப் சால்ட் 8 ரன்களிலும், குசால் மெண்டீஸ் 21 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டி புருய்ன், ரைலீ ரூஸோவ், காலிங் இங்ராம் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம் 19, ஈதன் போஷ் 15 என சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்கள் எதிரணிக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒற்றையிலக்க ரன்களோடும் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி தரப்பில் ரோலோஃப் வான் டெர் மெர்வே 4 வ்க்கெட்டுகளைக் கைப்பற்றினார்.