இணையத்தில் வைரலாகும் சச்சின் - தோனி புகைப்படம்!

Updated: Thu, Oct 06 2022 18:23 IST
Image Source: Google

இந்திய அணியில் கிரிக்கெட் ஜாம்பவான்களாக கருதப்படுபவர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி. கிரிக்கெட் களத்தில் இணைந்து கலக்கிய சச்சினும், தோனியும் டென்னிஸ் கோர்ட்டில் தற்போது இணைந்துள்ளனர். 

அவர்கள் இருவரும் விளம்பர பட படப்பிடிப்புக்காக இணைந்துள்ளதாக தெரிகிறது. இருவரும் கேஷுவல் டி-ஷர்ட் அணிந்து கொண்டு அதில் காட்சி அளிக்கின்றனர். மேலும் இருவரும் இணைந்துள்ள இந்தப் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இருவரும் அந்த விளம்பர படக்குழுவினர் சொன்னதை கூர்ந்து கவனித்துள்ளனர். 

இவர்கள் இருவரும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆத்மார்த்தமான அன்பை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே டென்னிஸ் விளையாட்டை விரும்புபவர்களும் கூட. அண்மையில் நடந்த அமெரிக்க ஓபன் தொடரின் போட்டியை தோனி நேரில் கண்டு களித்தார். அது மிகவும் அரிது. மறுபக்கம் சச்சினோ விம்பிள்டன் உட்பட இங்கிலாந்தில் நடைபெறும் டென்னிஸ் தொடர்களை மிஸ் செய்யவே மாட்டார்.

முன்னதாக, கபில்தேவ் உடன் இணைந்து கோஃல்ப் விளையாடி இருந்தார் தோனி. அந்தச் செய்தியும் வைரலாகி இருந்தது. வரும் 2023 ஐபிஎல் தொடரில் தோனி பங்கேற்று விளையாட உள்ளார். அதன் மூலம் அவர் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப உள்ளார். 

சச்சின், அண்மையில் நடந்து முடிந்த சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி இருந்தார். இந்தத் தொடரில் இந்தியாதான் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை