ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு காரணம் இதுதான் - சச்சின் டெண்டுல்கர்!

Updated: Mon, Oct 09 2023 12:12 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை ரசிகர்கள் விரும்பியது போன்றே பிரமாதமாக துவங்கியுள்ளது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே குவித்தது.

பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 41.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்கள் குறித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு காரணம் என்ன? இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் என்ன? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதேபோன்று இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி அவர்களை 199 ரன்களில் சுருட்டியது சிறப்பாக இருந்தது. அதேபோன்று ஆஸ்திரேலிய பவுலர்களும் சிறப்பாக ஆரம்பித்திருந்தாலும் அவர்களது அணியில் ஒரு இடதுகை சுழற்பந்து வீச்சாளர் இதுபோன்ற மைதானங்களில் இல்லை என்ற குறை தெரிந்தது.

அதேபோன்று விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியை உறுதி செய்தனர். அதிலும் குறிப்பாக ஆரம்பத்தில் நேரத்தை எடுத்துக் கொண்ட அவர்கள் தேவைப்பட்டபோது சரியான ஷாட்டினை விளையாடி ரன்களை சேகரித்தனர். இரண்டாம் பாதியில் பந்து நன்றாக பேட்டுக்கு வந்ததாகவும் தெரிந்தது. இந்திய அணி இந்த தொடரை மிக சிறப்பாக துவங்கியுள்ளது” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை