மகளிர் ஆசிய கோப்பை 2024: ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!

Updated: Sun, Jul 07 2024 13:05 IST
Image Source: Google

மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் இலங்கையில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள், யுஏஇ, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கொற்கவுள்ளன. அதன்படி ஜூலை 19ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது ஜூலை 28ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

மேலும் இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து லீக் சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதன்படி இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் மற்றும் யுஏஇ அணியும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் லீக் சுற்றின் முடிவில் குரூப் அட்டவணையில் டாப் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கொண்டு சமீபத்தில் இத்தொடருக்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டிருந்தது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் யுஏஇ மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இந்திய அணி 19ஆம் தேதி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியையும், ஜூலை 21ஆம் தேதி இரண்டாவது போட்டியில் யுஏஇ அணியையும், ஜூலை 23ஆம் தேதி மூன்றாவது போட்டியில் நேபாள் அணியையும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்த அணியில் தற்போது தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் விளையாடிவரும் பெரும்பாலான வீராங்கனைகள் அனைவரும் இடம்பிடித்துள்ளனர். மேற்கொண்டு ரிஸர்வ் வீராங்கனைகளாக ஸ்வேதா ஸ்ரேவத், சைகா இஷாக், தனுஜா கன்வர், மேக்னா சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், உமா சேத்ரி, பூஜா வஸ்திரேகர், அருந்ததி ரெட்டி, ரேனுகா தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரெயங்கா பாட்டீல், சஞ்சனா சஜீவன்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ரிஸர்வ் வீராங்கனைகள்: ஸ்வேதா ஸ்ரேவத், சைகா இஷாக், தனுஜா கன்வர், மேக்னா சிங்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை