சிபிஎல் 2021: மகுடம் சூடப்போவது யார்? கிங்ஸ் vs பேட்ரியாட்ஸ்!

Updated: Wed, Sep 15 2021 16:17 IST
Image Source: Google

பரபரப்பாக நடைபெற்றுவந்த இந்தாண்டு சிபிஎல் டி20 தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. 

இதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, டுவைன் பிராவோ தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

போட்டி முன்னோட்டம்

செயிண்ட் லூசியா கிங்ஸ்

ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லுசியா கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

கிங்ஸ் அணியில் ஆண்ட்ரே ஃபிளட்சர், டேவிட் வைஸ், டிம் டேவிட், ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால் என வலிமையான பேட்டிங் ஆர்டருடன், வஹாப் ரியாஸ், அல்சாரி ஜோசப் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களும் இடம்பிடித்துள்ள அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

இருப்பினும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடா நிலையில் இன்றைய போட்டியிலும் விளையாடுவாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் கடந்தாண்டும் இறுதிப்போட்டிக்கு வந்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி கோப்பையை வெல்லாத நிலையில், இம்முறை கோப்பையை வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ்

டுவைன் பிராவோ தலைமையிலான பேட்ரியாட்ஸ் அணியையுன் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனேனில் கிறிஸ் கெயில், எவின் லூயிஸ், ரூதர்ஃபோர்ட், ஃபேபியன் ஆலன் உள்ளிட்ட அதிரடி வீரர்களுடன், ஷெல்டன் காட்ரெல், நஷிம் ஷா, ஃபவத் அஹ்மத் ஆகியோரும் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். 

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ள பேட்ரியாட்ஸ் அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 14
  • கிங்ஸ் வெற்றி - 7
  • பேட்ரியாட்ஸ் வெற்றி - 5
  • முடிவில்லை - 2

உத்தேச அணி

செயிண்ட் லூசியா கிங்ஸ் - ஆண்ட்ரே பிளெட்சர் (கே), ரகீம் கார்ன்வால், மார்க் டியல், ரோஸ்டன் சேஸ், டேவிட் வைஸ், டிம் டேவிட், கீமோ பால், கடீம் அல்லீன், ஜீவர் ராயல், அல்ஸாரி ஜோசப், வஹாப் ரியாஸ்

செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் - எவின் லூயிஸ், கிறிஸ் கெயில், ஜோசுவா டா சில்வா, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், டுவைன் பிராவோ (கே), ஃபாபியன் ஆலன், டொமினிக் டிரேக்ஸ், ஷெல்டன் காட்ரெல், நசீம் ஷா, ஜான் -ரஸ் ஜகேசர், ஃபவாத் அஹம்த்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஃபெண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ஆண்ட்ரே பிளெட்சர்
  • பேட்டர்ஸ் - எவின் லூயிஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், மார்க் டியல்
  • ஆல் -ரவுண்டர்கள் - டொமினிக் டிரேக்ஸ், ஃபேபியன் ஆலன், டேவிட் வைஸ், ரோஸ்டன் சேஸ்
  • பந்துவீச்சாளர்கள் - ஃபவாத் அஹ்மத், ஜீவர் ராயல், வஹாப் ரியாஸ்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை