நியூசிலாந்து தொடருககான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; டி20க்கு புதிய கேப்டன் நியமனம்!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது ஒரு வெற்றியைக் கூட பதிவுசெய்யாமல் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.
சமீப காலங்களில் அந்த அணி ஐசிசி தொடர்களில் லீக் சுற்றுடன் வெளியேறுவது தொடர் கதையாகி வரும் நிலையில், தற்போது சொந்த மண்ணில் நடைபெறும் தொடரிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி முதல் தொடங்வுள்ளது.இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் மிக முக்கியமான பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து முகமது ரிஸவான் நீக்கப்பட்டு சல்மான் அலி ஆக அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஒருநாள் அணியின் கேப்டனாக ரிஸ்வான் தொடர்கிறார்.
இதுதவிர்த்து பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் நசீம் ஷா உள்ளிட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இளம் வீரர்கள் ஹசன் நவாஸ், முகமது ஹாரிஸ், அப்துல் சமாத், இர்ஃபான் நியாசி ஆகியோருடன் அனுபவ வீரர்கள் ஷதாப் கான், ஷாஹீன் அஃபிர்டி, அப்ரார் அஹ்மத் மற்றும் ஹாரிஸ் ராவூஃப் ஆகியோரும் டி20 அணியில் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
ஒருநாள் அணியை பொறுத்தவரையில் அப்துல்லா ஷஃபீக், முகமது வாசீம் ஜூனியர் ஆகியோர் மீண்டும் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் இமாம் உல் ஹக், பாபர் ஆசாம், நசீம் ஷா, குஷ்தீப் ஷா ஆகியோருடன் சுஃபியான் முக்கீமும் அணியில் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் ஷாஹீன் அஃப்ரிடி, அப்ரார் அஹ்மத் மற்றும் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோருக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை.
பாகிஸ்தான் டி20 அணி: ஹசன் நவாஸ், உமைர் யூசுப், முகமது ஹாரிஸ், அப்துல் சமத், சல்மான் அலி ஆகா (கேப்டன்), இர்ஃபான் நியாசி, குஷ்தில் ஷா, ஷதாப் கான், அப்பாஸ் அஃப்ரிடி, ஜஹந்தத் கான், முகமது அலி, ஷஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூப், சுஃபியான் முகீம், அப்ரார் அகமது, உஸ்மான் கான்.
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, அப்துல்லா ஷஃபீக், அப்ரார் அகமது, அகிஃப் ஜாவேத், பாபர் ஆசாம், ஃபஹீம் அஷ்ரப், இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது அலி, முகமது வாசிம் ஜூனியர், இர்பான் நியாசி, நசீம் ஷா, சுஃபியான் முகீம், தயப் தாஹிர்.