ரிஷப் பந்த் இந்த அஸ்திரேலிய வீரர் போல வருவார் - சஞ்சய் பங்கர் நம்பிக்கை!

Updated: Mon, Jun 20 2022 20:01 IST
Sanjay Bangar Has An Idea For Rishabh Pant To Improve His Batting After Poor Show In IND vs SA Seri (Image Source: Google)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமநிலையுடன் முடிந்துள்ளது. இத்தொடரில் முதலிரண்டு போட்டிகாளில் தோல்வியடிந்து ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த இந்தியா அதற்காக அஞ்சாமல் விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட்டில் நடைபெற்ற அடுத்த 2 போட்டிகளில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் துல்லியமாக செயல்பட்டு பெரிய வெற்றிகளை சுவைத்தது.

அதனால் சொந்த மண்ணில் எங்களை சாய்ப்பது அவ்வளவு சுலபமல்ல என்று தென் ஆப்பிரிக்காவுக்கும் காட்டிய இந்தியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. அந்த நிலைமையில் இந்த தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான 5ஆவது போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. ஆனால் மழையால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு 7.50 மணிக்கு தொடங்கிய அப்போட்டியில் 28/2 என இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தபோது, வந்த மழை ஒரு மணி நேரம் அடித்து நொறுக்கியதால் இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

அதனால் இரு அணிகளுமே இந்த தொடரின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பையை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வெடுத்த நிலையில் அவரின் இடத்தில் கேப்டனாக விளையாடிய ரிஷப் பந்த் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் என அனைத்திலும் மொத்தமாக சொதப்பினார். முதலில் ஒரு கேப்டனாக எந்த பவுலரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற சரியான அடிப்படையான முடிவை எடுப்பதில் தடுமாறிய அவர் சஹால் போன்ற பவுலர்கள் ஒருசில ஓவர்கள் சுமாராக வீசியதால் அவர்களின் திறமை மீது நம்பிக்கை இழந்து முழுமையான 4 ஓவர்களை கொடுக்கவில்லை.

அதனால் முன்னாள் வீரர்களின் விமர்சனங்களை வாங்கி கட்டிக்கொண்ட அவர் ஒரு பேட்ஸ்மேனாக இந்த தொடரில் வெறும் 57 ரன்களை மட்டுமே எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றவில்லை. அதிலும் சொல்லி வைத்தார் போல் 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவுட்டான அவர் பேட்டிங்கில் கொஞ்சம்கூட முன்னேறவில்லை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இந்நிலையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் 70 போட்டிகள் வரை தடுமாறியதாக கூறும் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் வருங்காலங்களில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் போல வருவார் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இதை 3 வருடமாக நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். சச்சின் டெண்டுல்கரை நீங்கள் பார்த்தால் அவர் தனது முதல் சதத்தை 75 அல்லது 76-வது போட்டியில் தான் மிடில் ஆர்டரில் தடுமாறிய பின் அதுவும் நியூசிலாந்துக்கு எதிராக தொடக்க வீரராக களமிறங்கிய பின்புதான் அடித்திருந்திருப்பார். அந்த வகையில் தற்சமயம் அதுபோன்றதொரு இடது – வலது கை ஜோடிதான் இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. 

அந்த வேலையை இஷான் கிசான் செய்தாலும் இந்திய அணி எதிர்பார்க்கும் நீண்ட கால தீர்வாக ஆஸ்திரேலியாவுக்கு ஆடம் கில்கிறிஸ்ட் செய்ததைப் போல ரிஷப் பண்ட் செய்யக் கூடியவராக உள்ளார். அதாவது மிடில் ஆர்டரில் 75+ ஒருநாள் போட்டிகளாக தடுமாறிக் கொண்டிருந்த சச்சின் கடந்த 1994இல் நவ்ஜோத் சித்துவுடன் ஓபனிங் பேட்ஸ்மேனாக ஆக்லாந்தில் நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே 82 (49) ரன்களை தெறிக்கவிட்டு அதன்பின் அந்த இடத்தில் 15,310 ரன்களை வெளுத்து வாங்கினார். 

அதுபோல 48 டி20 போட்டிகளில் 741 ரன்களை எடுத்து தடுமாறிக் கொண்டிருக்கும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கில்கிறிஸ்ட் போல ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினால் அபாரமாக செயல்படுவார்” என்று சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை