ஷுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்த இவரால் முடியும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

Updated: Mon, May 29 2023 15:30 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும், இறுதி போட்டி 29ம் தேதி அஹமதாபாத்தில் நடைபெற உள்ளது. 28ம் தேதி நடைபெற வேண்டிய போட்டியானது மழை காரணமாக 29ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இறுதி போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகிறது. 

ரசிகர்கள் மத்தியில் இறுதி போட்டி குறித்தான எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருவதால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், சென்னை – குஜராத் இடையேயான இறுதி போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் வீரரான சஞ்சர் மஞ்ரேக்கர், ஷுப்மன் கில்லின் விக்கெட்டை இலகுவாக வீழ்த்துவதற்கு தேவையான தனது ஆலோசனையையும் கொடுத்துள்ளார்.

இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், “போட்டியின் முதல் ஓவரை தோனி, தீபக் சாஹருக்கு தான் கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. தீபக் சாஹர், ஸ்விங் பவுலர் என்பதால் ஷுப்மன் கில் பேக் ஃபுட்டில்  தான் தீபக் சாஹரின் பந்துவிச்சை எதிர்கொண்டாக வேண்டும். எனவே இரண்டாவது ஓவரை மகேஷ் தீக்‌ஷன்னா போன்ற ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கு கொடுத்தால், சுப்மன் கில்லின் பேட்டிங் யுக்தியில் சில குழப்பங்கள் ஏற்பட்டு அதன் மூலம் அவர் விரைவாக விக்கெட்டை இழக்க நேரிடலாம். தூசார் தேஸ்பாண்டேவின் பந்துவீச்சை ஷுப்மன் கில்லால் இலகுவாக எதிர்கொள்ள முடியும், தோனி சுழற்பந்து வீச்சாளர்களை முன்கூட்டியே பயன்படுத்தினால் சுப்மன் கில்லின் விக்கெட்டை விரைவாக கைப்பற்ற முடியும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை