தன்னை அனுகிய அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் வாய்ப்பை மறுத்த சஞ்சு சாம்சன்!

Updated: Sun, Dec 11 2022 21:09 IST
Sanju Samson Gets Offer From Ireland Board To Represent Their Country
Image Source: Google

ஐபிஎலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன், இந்திய அணிக்காக 2015ஆம் ஆண்டிலேயே அறிமுகமாகிவிட்டார். இருப்பினும், விக்கெட் கீப்பராக தோனி செயல்பட்டு வந்ததால், தினேஷ் கார்த்திக்கை போல சாம்சனுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. 

தோனி ஓய்வு அறிவித்த சமயத்தில் விருத்திமான் சாஹா, ரிஷப் பந்த், கேஎல் ராகுல் போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டதால், மீண்டும் சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், ஒருசில போட்டிகளில் மட்டுமே சாம்சன் விளையாடும் நிலை ஏற்பட்டது.

ஆம், இந்த 7 வருடங்களில் சாம்சன் 11 ஒருநாள், 16 டி20 போட்டிகளில்தான் விளையாடியிருக்கிறார். அந்த அளவுக்கு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்காமல் பிசிசிஐ தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியில் நிச்சயம் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றுதான் கருதப்படுகிறது.

இதனால், சாம்சன் ஓய்வு அறிவித்துவிட்டு வெளிநாட்டு அணிக்கு சென்று விளையாட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஏற்கனவே, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் உன்முகுத் சந்த், போதிய வாய்ப்பு கிடைக்காததால், இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டு வெளிநாட்டு அணிக்காக விளையாட சென்றுவிட்டார். இப்படி பலர் சென்றுள்ளனர். இதனால், சாம்சனும் செல்ல வேண்டும் என்பதுதான் அவரது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

இந்நிலையில், அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் சாம்சனை தங்கள் நாட்டிற்காக விளையாட கோரி, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தால், அவர் அயர்லாந்து அணியின் கேப்டனாகவும், அயர்லாந்தில் இவருக்கென்று தனி வீடு, அந்நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

இருப்பினும், சாம்சன் தாய்நாட்டின் மீது இருக்கும் பற்று காரணமாக இந்த வாய்ப்பை வேண்டாம் என நிராகரித்துள்ளார். மேலும், வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், வாய்ப்புக்காக நான் தொடர்ந்து காத்திருப்பேன். வெளிநாட்டு அணிகள் இது சம்மந்தமாக என்னை அணுக வேண்டாம் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியிள்ளது. சாம்சனின் இந்த முடிவுக்கு பலர் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை