சாம்சன் அவரோட முழு திறமையை இன்னும் அறியாமல் இருக்கிறார் - ரவி சாஸ்திரி!

Updated: Sat, Jun 24 2023 21:47 IST
Sanju Samson is yet to realise his potential: Ravi Shastri! (Image Source: Google)

இந்திய அணி வருகிற ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான அணியில் சஞ்சு சாம்சன் எடுக்கப்பட்டிருக்கிறார்.

சஞ்சு சாம்சன் கடைசியாக நவம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடினார். அதன் பிறகு காயம் ஏற்பட்டதால் தொடர்ந்து விளையாட முடியாமல் இருந்த அவரை மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடக்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் எடுத்துள்ளது பிசிசிஐ.

சஞ்சு சாம்சன் 2015ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணியில் விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் டி20 போட்டிகளில் விளையாடி வந்த அவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். அதன்பின் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் முறையாக ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் எடுக்கப்பட்டார். அதற்கு அடுத்த தொடரிலிருந்து கிட்டத்தட்ட ஓராண்டாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் எடுக்கப்பட்டார். அடுத்தடுத்து சில தொடர்களில் விளையாடினாலும் டி20 உலககோப்பையில் இவரை பிசிசிஐ எடுக்கவில்லை.

காயத்திலிருந்து மீண்டு வந்த அவரை மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பிசிசிஐ எடுத்திருப்பது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இதற்கு வரவேற்பு தெரிவித்து தனது சில கருத்துக்களையும் பதிவிட்டிருக்கிறார். 

இதுகுறித்து பேசிய அவர், “சஞ்சு சாம்சன் மிகச்சிறந்த வீரர். அவரது முழு திறமையை அவரே உணராமல் இருக்கிறார். கடைசிவரை நின்று போட்டியை வெற்றி பெற்று கொடுக்கக்கூடிய வீரர் ஆவார். சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் உச்சம் தொடாமல் இருக்கிறார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவதற்குள் உச்சத்தை தொடவில்லை என்றால், நான் நிச்சயம் ஏமாற்றம் அடைவேன்.

நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபொழுது டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா இல்லை. அவரைப்போன்ற வீரர் இருக்கவேண்டும் என்று வாய்ப்பு கொடுத்தோம். பின்னர் துவக்க வீரராகவும் மாற்றினோம். அதன் பிறகு டெஸ்டிலும் ரோகித் சர்மா எவ்வளவு சிறப்பாக விளையாடி வருகிறார். அதுபோல சஞ்சு சாம்சன் உரிய வாய்ப்புகள் கிடைத்து உச்சத்தை பெற வேண்டும். திறமைமிக்க வீரர். மூன்று கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய வீரர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தன்னை நிரூபித்து அடுத்தடுத்த தொடர்களில் இடம் பெற்று விளையாடுவார் என்று நம்புகிறேன்” என கூறினார்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை