WI vs IND: இந்திய ஒருநாள் அணியில் கம்பேக் கொடுத்து சஞ்சு & உனாத்கட்!

Updated: Fri, Jun 23 2023 17:00 IST
Image Source: Google

இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதேசமயம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடைபெறவுள்ளதால் அத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது.   

இந்நிலையில் இத்தொடரின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணிகளுக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் இறுதி அடியை இந்த தொடரிலிருந்து தொடங்கும் இந்திய அணிக்கு காயமடைந்த கேஎல் ராகுலுக்கு பதிலாக உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வாகியுள்ளார்.

அதே போல டாப் ஆர்டரில் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மன் கில், விராட் கோலி, சூரியகுமார் யாதவ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் விக்கெட் கீப்பர்களாக ரசிகர்களின் அபிமான சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிசான் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். மேலும் ஆல் ரவுண்டர்கள் பிரிவில் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா மற்றும் ஷார்துல் தாக்கூருடன் நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

அத்துடன் சுழல் பந்து வீச்சு துறையில் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல் ஆகியோர் மீண்டும் ஜோடியாக தேர்வாகியுள்ள நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களாக உம்ரான் மாலிக் மற்றும் இளம் வீரர் முகேஷ் குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அது போக நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வரும் முகமது சிராஜுடன் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனட்கட் நீண்ட நாட்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தேர்வாகி கம்பேக் கொடுத்துள்ளார்.

ஆனாலும் இந்த அணியில் ஐபிஎல் தொடரில் அதிரடியாக செயல்பட்ட ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்றவர்களுக்கு உடனடியாக தேர்வுக்குழு வாய்ப்பு கொடுக்கவில்லை. அதே போல டெஸ்ட் அணியில் கழற்றி விடப்பட்ட சீனியர் வீரர் முகமது சமியுடன் புவனேஸ்வர் குமாரும் தேர்ந்தெடுக்கப்படாதது நிறைய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. 

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கே), ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், யுஸ்வெந்திர சஹால், ஜெயதேவ் உனட்கட், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை