துலீப் கோப்பை 2024: சதத்தை நெருங்கும் சஞ்சு சாம்சன்; வலிமையான நிலையில் இந்தியா டி அணி!

Updated: Thu, Sep 19 2024 21:37 IST
Image Source: Google

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு சுற்று ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மூன்றாம் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. அதன்படி இன்று தொடங்கிய 5ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணியை எதிர்த்து அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா டி அணி விளையாடியது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து, இந்தியா டி அணி தரப்பில் தேவ்தத் படிக்கல் - ஸ்ரீகர் பரத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இவரும் இணைந்து தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களது அரைசதங்களை பதிவுசெய்து முதல் விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 50 ரன்கள் எடுத்த நிலையில் படிக்கல் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 52 ரன்களை எடுத்திருந்த ஸ்ரீகர் பரத்தும் தனதி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரிக்கி புய் ஒருபக்கம் நிதானமாக விளையாடிய நிலையில், மறுமுனையில் விளையாடிய நிஷாந்த் சந்து 19 ரன்களுக்கும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ரிக்கியுடன் இணைந்த சஞ்சு சாம்சன் வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் ரிக்கி புய் அரைசதம் கடந்த நிலையில் 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், தற்சமயம் சதத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா டி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சஞ்சு சாம்சன் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 89 ரன்களுடனும், சரனேஷ் ஜெய்ன் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா பி அணி தரப்பில் ராகுல் சஹார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை