கடந்த 2023 - 24 ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையேயான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய மும்பை அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 237 ரன்களைச் சேர்த்தது. இந்ந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கேப்டன் அஜிங்கியா ரஹானே 86 ரன்களுடனும், சர்ஃப்ராஸ் கான் 54 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அபாரமாக விளையாடி வந்த அஜிங்கியா ரஹானே சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 97 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் கான் முதல் தர கிரிக்கெட்டில் தனது 15ஆவது சததைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஷம்ஸ் முலானி 5 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தனுஷ் கோட்டியானும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசததை பதிவுசெய்த கையோடு 64 ரன்களில் விக்கெட்டை இஅந்தார். அவருக்கு அடுத்து களமிறங்கிய மஹித் அவஸ்தி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ஷர்துல் தக்கூரும் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஆனாலும் மறுபக்கம் ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய சர்ஃப்ராஸ் கான் தனது இரட்டை சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் மும்பை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 539 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ள சர்ஃப்ராஸ் கான் 25 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 221 ரன்களுடன் களத்தில் உள்ளார். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளையும், யாஷ் தயாள், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் சர்ஃப்ராஸ் கான் இரட்டை சதம் அடித்தன் மூலம் புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். அதன்படி, இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் இரட்டை சதம் விளாசிய முதல் மும்பை வீரர் எனும் சாதனையை சர்ஃப்ராஸ் கான் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சராசரியை கொண்ட இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் சர்ஃப்ராஸ் கான் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் விஜய் மெர்சண்ட் 81.8 என்ற சராசரியுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், சர்ஃப்ராஸ் கான் 69.6 என்ற சராசரியுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News