அடுத்த ஐந்தாண்டுகளுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அட்டவணை வெளியீடு!

Updated: Sat, Jul 16 2022 23:04 IST
Image Source: Google

இரண்டு ஆண்டுகள் நடைபெறும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக புள்ளிகளை பெரும் டாப் 2 அணிகள், இறுதிப் போட்டிக்கு செல்லும். அதன்படி 2019- 21 ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டிக்கு சென்றன.

தற்போது 2021 மற்றும் 23 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது இந்திய அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அடுத்த இரண்டு தொடர்களில் இந்திய அணி எந்தெந்த அணிகளுடன் மோத உள்ளது என்பது குறித்து தற்போது காணலாம்.

2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் நியூசிலாந்துடன் மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்துடன் 5 போட்டிகளிலும், வங்கதேசத்துடன் இரண்டு போட்டிகளிலும் மோத உள்ளது.

இதேபோன்று அந்நிய மண்ணில் ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளிலும் , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மூன்று போட்டிகளிலும் மோத உள்ளது. இதில் இந்திய அணி பலமான அணிகளுடன் மோத உள்ளதால் இறுதிப் போட்டிக்கு செல்வது கடினமாகும். 

இதேபோன்று ஆஸ்திரேலியா அணி தனது சொந்த மண்ணில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தான் ஆகிய ஆண்களுடனும் அந்நிய மண்ணில் நியூசிலாந்து, இங்கிலாந்து ,ஸ்ரீலங்கா அணிகளுடன் மோத உள்ளது.

இங்கிலாந்த அணி அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளுடனும் , அந்நிய மண்ணில் நியூசிலாந்து , இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் மோத உள்ளது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் , வங்கதேசம் ஆகிய அணிகளுடன் சொந்த மண்ணிலும், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளுடன் அந்நிய மண்ணிலும் மோத உள்ளது.

 

இதேபோன்று 2025- 27 ஆம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் மோத உள்ளன. இதே போன்று இந்திய அணி அந்நிய மண்ணில் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் இலங்கையுடன் விளையாட உள்ளது.

வழக்கம்போல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய அணி பாகிஸ்தானுடன் எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. ஒருவேளை இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடினால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க சூழல் உருவாகும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை