ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Sep 03 2024 13:50 IST
Image Source: Cricketnmore

Scotland vs Australia 1st T20I Dream11 Prediction: ஆஸ்திரேலிய அணியானது ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை எடின்பர்க்கில் நடைபெறவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளும் இதற்கு முன் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதின. இதில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றியைப் பதிவுசெய்திருந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியானது முதல் முறையாக ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடுகிறது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

SCO vs AUS 1st T20I : போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா
  • இடம் - கிரேஞ்ச் கிரிக்கெட் கிளப், எடின்பர்க்
  • நேரம் - செப்டம்பர் 04, இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

SCO vs AUS 1st T20I: Pitch Report

எடின்பர்க்கில் உள்ள கிரெஞ்ச் கிரிக்கெட் மைதானமானது பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு சமமான சாதகத்தை வழங்கும் மைதாங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி 166 ரன்களாக உள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்ஸின் சராசரியானது 132 ரன்களாக உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 254 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SCO vs AUS 1st T20I: Where to Watch?

ஆஸ்திரேலியா - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். ஆனால் இத்தொடரை எந்த தொலைக்காட்சி நிறுவனம் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCO vs AUS 1st T20I: Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 01
  • ஸ்காட்லாந்து - 00
  • ஆஸ்திரேலியா - 01

Scotland vs Australia 1st T20I: Probable Playing XI

ஸ்காட்லாந்து உத்தேச லவன்: ஜார்ஜ் முன்சி, மைக்கேல் ஜோன்ஸ், பிராண்டன் மெக்முல்லன், ரிச்சி பெரிங்டன்(கே), மேத்யூ கிராஸ், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், கிறிஸ் சோல், பிராட் வீல், சஃப்யான் ஷெரீஃப்

ஆஸ்திரேலியா உத்தேச லெவன்: ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ்(கே), மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி, கேமரூன் கிரீன், சீன் அபோட், நாதன் எல்லிஸ், ரிலே மெரிடித், ஆடம் ஸாம்பா.

Scotland vs Australia 1st T20I: Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - மேத்யூ கிராஸ்
  • பேட்ஸ்மேன்கள் - டிராவிஸ் ஹெட், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஜார்ஜ் முன்ஸி, பிராண்டன் மெக்முல்லன்
  • ஆல்ரவுண்டர் - மார்கஸ் ஸ்டொய்னிஸ், மைக்கேல் லீஸ்க், ஆரோன் ஹார்டி
  • பந்துவீச்சாளர்கள் - சீன் அபோட், ஆடம் ஸாம்பா, பிராட் வீல்

SCO vs AUS Dream11 Prediction, SCO vs AUS 1st T20, Today Match SCO vs AUS, SCO vs AUS Dream11 Team, Fantasy  Cricket Tips, SCO vs AUS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Scotland vs Australia

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை