SCO vs NZ, 2nd T20I: ஸ்காட்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து!

Updated: Fri, Jul 29 2022 22:44 IST
Image Source: Google

ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்று முன்னிலையும் பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. 

இதில் கடந்த போட்டியில் சதம் விளாசிய ஃபின் ஆலன் 6 ரன்களிலும், தனே கிளெவர் 28 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து ஜோடி சேர்ந்த மார்க் சாப்மன் - டெரில் மிட்செல் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் மிட்செல் 31 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க் சாப்மேன் அரைசதம் கடந்தார். அதன்பின் அவரும் 83 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இருப்பினும் இறுதியில் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய மைக்கேல் பிரேஸ்வெல் 22 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதனால் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களைச் சேர்த்தது. ஸ்காட்லாந்து தரப்பில் கவின் மெய்ன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில் மைக்கேல் ஜோன்ஸ் ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் நியூசிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அந்த அணியில் கிறிஸ் கிரேவ்ஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 37 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமேச் சேர்த்து. நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் ரிப்பன், ஜிம்மி நீஷம் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை