பிபிஎல் 2021: காரோனா பரவலால் போட்டி ஒத்திவைப்பு!

Updated: Thu, Dec 30 2021 13:36 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக்கின் 11ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில் இன்று நடைபெற இருந்த 27ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் மோதவிருந்தன. 

இந்நிலையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டத்தை அடுத்து இப்போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அணி வீரர்களுக்கும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதனால் இன்று நடைபெற இருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டு, மாற்று தேதியை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளதாக பிக் பேஷ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக ஆஷஸ் தொடரின் போட்டி நடுவர் டேவிட் பூனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை