மேத்யூ கிராஸ் அதிரடியில் ஸ்காட்லாந்து அபார வெற்றி!

Updated: Sun, Sep 26 2021 10:50 IST
Image Source: Google

ஸ்காட்லாந்து - பப்புவா நியூ கினியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி 4.7 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சாட் சொபர் 46 ரன்களைச் சேர்த்தார். ஸ்காட்லாந்து அணி தரப்பில் ஹம்ஸா தாஹிர், கவின் மெய்ன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கைத் துரத்திய ஸ்காட்லாந்து அணிக்கு மேத்யூ கிராஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அசத்தினார். இதில் அரைசதம் அடித்த அவர், 70 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினர். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பின்னர் களமிறங்கிய கலம் மெக்லொட் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதன்மூலம் 43 ஓவர்களிலேயே ஸ்காட்லாந்து அணி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை