டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி நமீபியாவை எதிர்கொள்கிறது.

Advertisement

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - ஸ்காட்லாந்து vs நமீபியா
  • இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம் 

ஸ்காட்லாந்து அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் அபார வெற்றியைப் பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. 

ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணியுடனான சூப்பர் 12 லீக் ஆட்டத்தில் வெறும் 60 ரன்களில் ஆல் அவுட்டாகி 130 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி நிச்சயம் இப்போட்டியில் வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கவுள்ளது.

அதேசமயம் நமீபியா அணி, முதல் சுற்று  போட்டிகளில் நெதர்லாந்து, அயர்லாந்து அணிகளை வீழ்த்தி தற்போது சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது. 

Advertisement

அதனால் அந்த அணியால் நிச்சயம் ஸ்காட்லாந்தையும் வீழ்த்த முடியும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 8
  • நமீபியா வெற்றி - 4
  • ஸ்காட்லாந்து வெற்றி - 4

உத்தேச அணி 

Advertisement

ஸ்காட்லாந்து - ஜார்ஜ் முன்சி, கைல் கோட்சர் (கே), மேத்யூ கிராஸ், ரிச்சி பெர்ரிங்டன், கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், ஜோஷ் டேவி, சஃப்யான் ஷெரீப், பிராட்லி வீல்

நமீபியா - ஜேன் கிரீன், கிரேக் வில்லியம்ஸ், மைக்கேல் வான் லிங்கன், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (கே), டேவிட் வைஸ், ஜேஜே ஸ்மிட், ஜான் ஃப்ரைலின்க், பிக்கி யா பிரான்ஸ், ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன், ரூபன் டிரம்பெல்மேன், பெர்னார்ட் ஷால்ட்ஸ்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - மேத்யூ கிராஸ், ஜேன் கிரீன்
  • பேட்டர்ஸ் - ஜார்ஜ் முன்சி, கிரேக் வில்லியம்ஸ், கலம் மேக்லியோட்
  • ஆல்-ரவுண்டர்கள் - டேவிட் வைஸ், ரிச்சி பெர்ரிங்டன், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ், ஜான் ஃப்ரைலின்க்
  • பந்துவீச்சாளர்கள் - ஜோஷ் டேவி, கிறிஸ் கிரீவ்ஸ்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News