ஐசிசி விதிகளை மீறியதாக ஸ்காட்லாந்து வீரர்களுக்கு அபராதம்!

எதிர்வரும் 2027அம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இரண்டாம் கட்ட அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மே 10ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் நெதரலாந்து அணி வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்களைச் சேர்த்த நிலையில், பின்னர் இலக்கை நோக்கி விளையாடியா ஸ்காட்லாந்து அணியானது 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன் காரணமாக இப்போட்டியில் நெதர்லாந்து அணியானது 19 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஸ்காட்லாந்து அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மார்க் வாட் ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி இருவரும் நடுவரின் முடிவை ஏற்க மறுத்ததன் காரணமாக இருவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 10 சதவீத தொகையும், ஒரு கரும்புள்ளியையும் ஐசிசி அபராதமாக விதித்துள்ளது குறிப்பிடத்தக்காது.
அதன்படி இப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் எதிராக பந்துவீசிய மார்க் வாட் எல்பிடபிள்யூக்கு மேல் முறையீடு செய்த நிலையில் அதனை கள நடுவர் நிராகரித்தார். மேலும் அவர் காள நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன், தனது தொப்பியையும் தரையில் தூக்கி எறிந்த அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரண்மாக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஸ்காட்லாந்து இன்னிங்ஸின் 46வது ஓவரை நெதர்லாந்து வீரர் ரோலோஃப் வான்டெர் மெர்வ் விசிய நிலையில் ஓவரின் 5ஆவது பந்தில் மேத்யூ கிராஸ் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தாஅர். ஆனால் நடுவர் ஆவுட் கொடுத்ததற்காக அவர் தனது மட்டையை அதிருப்தியுடன் காட்டியதுடான், கிரீஸை விட்டும் வெளியேற மறுத்திருந்தார். ஏனெனில் அச்சமயம் அவர் 47 ரன்களை சேர்த்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் முயற்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
இருப்பினும் இது போட்டி விதிகளின் படி தவறு என்பதால் ஐசிசி அவருக்கு இந்த அபராதத்தை விதித்துள்ளது. இதனையடுத்து இருவரும் தங்களின் குற்றங்களை ஒப்புக்கொண்டதுடன், அபராதத்தையும் ஏற்றுக்கொண்டதால் மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்பதையும் ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மாதங்களில் இருவரின் முதல் குற்றம் என்பதால் அவர்கள் மேற்கொண்டு போட்டிகளில் தொடரலாம் என்பதையும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.