உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: லண்டன் ஓவலில் இறுதிப்போட்டி!

Updated: Wed, Feb 08 2023 18:03 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள இந்தியா, இந்த தொடரை 2-0 அல்லது 3-0 அல்லது 3-1 என்று கைப்பற்ற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். புள்ளிப் பட்டியலில் ஏற்கனவே ஆஸ்திரேலியா நம்பர் 1 இடத்தில் உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை நாக்பூர் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வழக்கம் போல இடது கையில் பயிற்சி மேற்கொள்ளாமல் வலது கையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சவுத்தாம்ப்டனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::