ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆசியக் கோப்பை தொடரை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் இந்தியா ஏழு முறையும், இலங்கை ஆறு முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும் வென்று இருக்கிறது. நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கான எதிர்பார்ப்பு மிக அதிக அளவில் இருக்கிறது. 

Advertisement

கடந்த முறை ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்றில் வென்று, இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. இதேபோல் 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் முதல் முறையாக ஒரு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதற்கு அடுத்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது. 

Advertisement

இந்தியா வென்ற இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்த பொழுதும், இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான செயல்பாட்டின் காரணமாக, இந்திய அணி அந்தப் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்தது. விராட் கோலி தனது அற்புதமான பேட்டிங்கால், அந்த போட்டியை தனி ஒரு வீரராக வென்று கொடுத்தார். இப்பொழுது வரை அந்தப் போட்டி பலருக்கும் மறக்க முடியாத ஒரு போட்டியாக இருக்கிறது.

தற்பொழுது விராட் கோலி குறித்து பேசி உள்ள பாகிஸ்தான அணியின் துணை கேப்டன் ஷதாப் கான், “விராட் கோலி நிச்சயமாக உலகத் தரம் வாய்ந்த வீரர். அவரை எதிர்கொள்ள நீங்கள் நிறைய திட்டமிட வேண்டும். எப்படி இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய மைண்ட் கேம்கள் இருக்கின்றன. ஏனென்றால் நிச்சயமாக இங்கு எல்லோரிடமும் திறமை இருக்கிறது. ஆனால் நீங்கள் மற்றவர்களின் மனதை எப்படி படிக்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் எல்லாம் மாறும். 

பேட்ஸ்மேன் பந்துவீச்சாளர் மனதையும், பந்துவீச்சாளர் பேட்ஸ்மேன் மனதையும் படிக்கிறார்கள். மேலும் அது சூழ்நிலை என்ன என்பதை பொறுத்தது. விராட் கோலி எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் என்றால், விராட் கோலி எங்களுக்கு எதிராக செயல்பட்ட விதம், உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் கூட எந்த ஒரு பேட்ஸ்மேனும், எங்களைப் போன்ற ஒரு பந்து வீச்சு வரிசைக்கு எதிராக அப்படி செயல்பட்டு இருக்க முடியாது. இதில் அழகான விஷயம் என்னவென்றால், அவரால் எந்த நிலையிலும் எப்போதும் இதைச் செய்ய முடியும்” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News