மகளிர் ஆசிய கோப்பை 2022: மந்தனா, ஷஃபாலி அசத்தல்; வங்கதேசத்திற்கு 160 டார்கெட்!

Updated: Sat, Oct 08 2022 14:38 IST
Shafali Verma's half-century guides India to a competitive score against Bangladesh (Image Source: Google)

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசதத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா - வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. 

அதன்படி கேப்டன் ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா அரைசதம் கடந்து, 55 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜொமிமா ரோட்ரிக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ரிச்சா கோஷ், கிரன் நவ்கிரே, தீப்தி சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 35 ரன்களைச் சேர்த்திருந்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை