ஷாரூக் கான் அதிரடி சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது தமிழ்நாடு!

Updated: Wed, Nov 09 2022 10:33 IST
Shahrukh Khan stars in Tamil Nadu's win over Bangladesh XI (Image Source: Google)

வங்கதேச லெவன் அணி தமிழகத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழக அணி வென்ற நிலையில், இன்று இரண்டாவது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச லெவன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பாபா இந்தரஜித் தலைமையிலான தமிழக அணி களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய சூர்யபிரகாஷ் 42 ரன்களில் ஆட்டமிழக்க, நாராயண் ஜெகதீசன் 18 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து பொறுப்பான ஆட்டத்தை விளையாடிய சாய் சுதர்சன் 40 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். கேப்டன் பாபா அப்ரஜித்தும் 20 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். டாப் வரிசையில் 3 வீரர்கள் ரன் அவுட்டாக தமிழக அணி தடுமாறியது.

128 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்த நிலையில், அதிரடி வீரர் ஷாரூக்கான் வங்கதேச பந்துவீச்சை சிதறடித்தார். 7 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசிய ஷாரூக்கான், 47 ஓவர் முடிவில் 69 பந்துகளில் 100 ரன்களை விளாசினார். சஞ்சய் யாதவ் தன் பங்கிற்கு 39 ரன்கள் எடுக்க, தமிழக அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்தது.

அதன்பின் 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச லெவன் அணி மகமுதுல் ஹசன் சிலம்பரசன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். அனாமுல் ஹக் 33 பந்தில் 24 ரன்கள் எடுத்தார். சயிப் ஹசன் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஒரு பக்கம் வங்கதேச வீரர்கள் தடுமாறினாலும், தவ்ஹித் என்ற வீரர் பொறுப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 74 பந்தில் 73 ரன்கள் எடுத்தார்.

வங்கதேச அணி 40 ஓவரில் 194 ரன்களுக்கு 6 விக்கெட் விழுந்த நிலையில், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது விஜிடி விதிப்படி தமிழக அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக வீரர் சிலம்பரசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தமிழக வீரர் ஷாரூக்கான், மீண்டும் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி இருப்பதால், ஐபிஎல் தொடரில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை