ஐஎல்டி20 தொடரிலிருந்து விலகினார் ஷமார் ஜோசப்!

Updated: Tue, Jan 30 2024 13:12 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றிபெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன.

இந்நிலையில் இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிகாக அறிமுக வீரராக கமிறங்கிய ஷமார் ஜோசப் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன்பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். ஏனெனில் தனது முதல் டெஸ்ட் தொடரிலேயே அபாரமாக செயல்பட்ட ஷமார் ஜோசாப் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றதுடன், தொடரின் தொடர் நாயகன் விருதையும் வென்று சாதித்துள்ளார். 

முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஷமார் ஜோசப் பேட்டிங் செய்த போது மிட்செல் ஸ்டார்க் வீசிய அபாயகரமான யார்க்கர் பந்து ஜோசப்பின் பாதங்களை பதம் பார்த்தது. இதனால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற அவர், மேற்கொண்டு அப்போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்தது. 

இருப்பினும் தனது வலியையும் பொறுட்படுத்தாமல் அடுத்த நாளே களத்திற்கு வந்து பந்துவீசியதுடன், 11 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இதையடுத்து அவருக்கு பாகிஸ்தான் சூப்பர் லீக், இன்டர்நேஷனல் லீக் உள்ளிட்ட டி20 தொடர்களில் விளையாடவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

அதன்படி ஐஎல்டி20 தொடரில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஷமார் ஜோசப் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் தனது காயம் காரணமாக அவர் நடப்பாண்டு ஐஎல்டி20 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மருத்துவ சிகிச்சைகாக தாயகம் திரும்பியுள்ள ஷமார் ஜோசப், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் பெஷாவர் ஸால்மி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை