ஐசிசி மாதாந்திர விருதுகள்: நவம்பர் மாதத்திற்கான பட்டியலில் ஷமி, மேக்ஸ்வெல், ஹெட்!

Updated: Thu, Dec 07 2023 17:20 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

அதில் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்திய மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளரான இந்தியாவை சேர்ந்த முகமது ஷமி இப்பட்டியளில் இடம்பிடித்துள்ளார். 

அதேபோல் நடப்பு உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய வெல்வதற்கு உதவிய முக்கிய வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் டிராவிஸ் ஹெட் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும், கிளென் மேக்ஸ்வெல் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரட்டை சதமடித்தும் அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் வங்கதேசத்தை சேர்ந்த வீராங்கனைகளான நஹிதா அக்தர், பர்கானா ஹோக் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த சாதியா இக்பால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை