பயிற்சியின் போது காயமடைந்த ஷாம் மசூத்; மருத்துவமனையில் அனுமதி!

Updated: Fri, Oct 21 2022 16:07 IST
Shan Masood has been taken to hospital for scans after Mohammad Nawaz's shot struck him on the head (Image Source: Google)

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்குகின்றன. கடந்த 16ஆம் தேதி முதல் நடந்துவந்த தகுதிச்சுற்று போட்டிகள் இன்றுடன் முடிகின்றன. குரூப் ஏ-விலிருந்து இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. குரூப் பி-யிலிருந்து அயர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், 2ஆவது அணியை தீர்மானிக்கும் போட்டி ஸ்காட்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது.

நாளை முதல் சூப்பர் 12 சுற்று தொடங்கும் நிலையில், கிரிக்கெட் உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 23ஆம் தேதி மெல்பர்னில் நடக்கிறது. அதற்காக இரு அணிகளும் மிகத்தீவிரமாக தயாராகிவருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முக்கியமான டாப் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேனான ஷான் மசூத்துக்கு தலையில் அடிபட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் ஷான் மசூத் மற்றும் முகமது நவாஸ் ஆகிய இருவரும் அருகருகே பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டபோது, நவாஸ் ஒரு ஷாட்டை ஓங்கி அடிக்க, பந்து ஷான் மசூத்தின் தலையில் பட்டது. ஷான் மசூத் ஹெல்மெட் அணியாமல் பயிற்சியில் ஈடுபட்டதால் பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்தார்.

உடனடியாக பாகிஸ்தான் அணியின் மருத்துவக்குழு அவருக்கு முதலுதவி செய்து பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு அனைத்துவிதமான ஸ்கேன்களும் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிற்குஎதிரான போட்டி நாளை மறுநாள் நடக்கவுள்ளதால் அந்த போட்டியில் ஷான் மசூத் ஆடுவது கடினம். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு.

 

ரிஸ்வான் - பாபர் அசாம் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக ஆடுவதால், பாகிஸ்தான் அணிக்கு மிடில் ஆர்டர் பெரும் பிரச்னையாக உள்ளது. எனவே ஷான் மசூத்தை ஓபனிங்கில் இறக்கிவிட்டால் பாபர் அசாம் 3ஆம் வரிசையில் ஆடுவது அந்த அணியின் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வாக அமையும் என்று அவர்கள் நினைத்த நிலையில், ஷான் மசூத் தலையில் அடிபட்டிருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை